சரும பிரச்சினைகளிலிருந்து தீர்வு பெற Mango Face Pack
பொதுவாக மாம்பழம் என்றாலே அனைவருக்கும் விருப்பமான ஒரு கனியாகக் காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் முக்கனிகளுள் முதன்மையானதும் மாம்பழம் தான்.
மாம்பழமானது உண்பதற்கு மட்டுமில்லாமல் சரும அழகுக்கும் மிகவும் சிறந்தது.
சரி இனி மாம்பழ ஃபேஸ் பெக் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பழுத்த மாம்பழம் - 1
யோகர்ட் - 1 மேசைக்கரண்டி
தேன் - 1 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் மாம்பழத்தின் தோலை நீக்க வேண்டும். பின்னர் மாம்பழம் நன்றாக கூழாக மாறும்வரை மசித்துக் கொள்ளவும்.
அதன்பின்னர் மாம்பழ கூழில் எடுத்து வைத்துள்ள யோகர்ட், தேன் என்பவற்றை சேர்த்து கலக்கவும்.
இந்த மாஸ்க்கை முகத்தில் தடவுவதற்கு முன்னர் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.
கழுவிய பின்னர் இந்த மாஸ்க்கை கண் தவிர்த்து முகம், கழுத்து பகுதிகளில் தடவ வேண்டும்.
20 நிமிடங்கள் வரையில் அதை வைத்திருந்து காயவிட்டு, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.