கழுத்து கருப்பா இருக்கா? இந்த பொருளை அப்படியே தடவி விடுங்க..அரை நொடியில் அதிசயம் தெரியும்!
பெண்கள் பலர் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்துக்கு கொடுப்பது இல்லை.
கழுத்தில் கருமை இருப்பது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது.
இதனை நினைத்து கவலை கொள்ளாமல் சில எளிய வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்து விடலாம்.
கழுத்தில் உள்ள கருமையை போக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் பற்றி பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு உங்கள் சருமத்தை வெண்மையாக்க உதவுகிறது. எனவே, ஒரு உருளைக்கிழங்கு துண்டை எடுத்து உங்கள் கழுத்தின் கருமையான பகுதிகளில் வட்ட இயக்கத்தில் சுமார் 5 நிமிடங்கள் தடவுங்கள்.
பின்னர் அந்த பகுதியை தண்ணீரால் கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படி செய்து பலன்களை அனுபவியுங்கள்.
பேக்கிங் சோடா
சிறிது தண்ணீர் மற்றும் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி பேக்கிங் சோடாவை கலந்து கருமையாக உள்ள உங்கள் கழுத்து பகுதியில் தடவுங்கள்.
சில நிமிடங்கள் அப்படியே விடவும். அது காய்ந்ததும், ஈரமான விரல்களைப் பயன்படுத்தி துடைத்து, பின்னர் தண்ணீரில் கழுவவும்.
கற்றாழை
கற்றாழை இலைகளிலிருந்து பிழிந்த ஜெல்லை நீங்கள் நேரடியாக சருமத்தில் பயன்படுத்தலாம்.
அல்லது இலைகளை வெயிலில் உலர்த்தி, உலர்ந்த இலைகளைக் கலந்து அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து ஸ்க்ரப் செய்யலாம். இப்படி செய்வதால் கழுத்து கருமை நீங்கும்.