மாம்பழத்தை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? தெரிஞ்சிக்க வேண்டிய விடயம்
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழம் எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று நம்மில் பலரும் அறியாத நிலையில் தற்போது தெரிந்துகொள்வோம்.
மாம்பழம்
அதிகமான சத்துக்களை கொண்டுள்ள மாம்பழத்தை அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகரித்து வரும் நிலையில், உடல்நல பாதிப்பும் ஏற்படுகின்றது.
இதற்கு சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளையும், நீர்ச்சத்து அதிகமான உணவுகளை எடுத்துக்கொண்டால், எலக்ரோலைட் அளவு கட்டுக்குள் இருப்பதுதுடன், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
மேலும் கோடை காலத்தில் செரிமான பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் தர்பூசணி, முலாம்பழம், மாம்பழம் போன்ற பருவகால பழங்களை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் இவை நீரிழப்பை தடுக்கின்றது.
மாம்பழத்தை எப்போது சாப்பிடலாம்?
அதே போன்று சரியான நேரத்தில் சரியான அளவில் சாப்பிடுவது மிக முக்கியம். அவ்வாறு இல்லையெனில் உடல் உபாதை பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அந்த வகையில் மாம்பழத்தினை மதிய உணவிற்கு பின்பு எடுத்துக்கொண்டால் பல நன்மைகளை பெறலாம்.
உணவியல் நிபுணர் கூறுகையில், நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானத்திற்கு சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும்... கல்லீரலில் சுரக்கும் ஒருவகை திரவம், செரிமான நொதிகள் மற்றும் வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் இவற்றினால் நாம் சாப்பிடும் உணவுகள் உடைக்கப்படுகின்றது.
மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால, குடல் இயக்கத்தையும், சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்துவதுடன், மலச்சிக்கலையும் தடுக்கின்றது.
எனவே உணவு உட்கொண்ட பின்பு மாம்பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும்'' என்று கூறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |