Mango Ice-cream: மாம்பழ ஐஸ்க்ரீமை ருசித்தது உண்டா?
பொதுவாக பழங்களில் அதிகமானோர் விரும்பி சாப்பிடும் பழமாக மாம்பழம் பார்க்கப்படுகின்றது.
அதுவும் கோடைக்காலம் வந்து விட்டால் மாம்பழங்களுக்கு பஞ்சமே இருக்காது. மேலும் கோடைக்காலத்திற்கு வரும் தாகத்திற்கு மாம்பழங்களில் பானம் செய்தால் சுவையோ சுவை.
இவ்வாறு எடுத்து கொள்ளும் பழங்களை எப்போதும் அப்படியே பழமாக வெட்டிச் சாப்பிடுவது சில நேரங்களில் சலித்துவிடும்.
இதனை வேறு ஏதாவது ரெசிபியில் ட்ரை செய்யலாம் என்ற ஆர்வம் பலருக்கும் இருக்கும்.
அந்த வகையில் வீட்டிலுள்ள மாம்பழங்களை கொண்டு சூப்பரான புது ரெசிபி ஒன்று செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாம்பழம் – 2
பால் – 2 கப்
வெண்ணிலா ஐஸ்க்ரீம் – 1 ஸ்பூன்
சர்க்கரை – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் தேவையான மாம்பழங்களை எடுத்து தோல் நீக்கி துப்பரவு செய்ய வேண்டும்.
காயாக இருந்தால் கண்டிப்பாக தோல் நீக்கி விட வேண்டும். நன்றாக பழுத்த பழம் என்றால் அதற்கு அவசியம் இல்லை. ஆனால் கொட்டை இருக்கக் கூடாது.
இதனை தொடர்ந்து நறுக்கிய பழங்கள், சர்க்கரை,பால் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு பவுலில் ஊற்றி வெண்ணிலா ஐஸ்கீரிம் சேர்த்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரிமாறலாம்.
இன்னும் குளிர்ச்சியாக வேண்டும் என்றால் குளிர்சாதன பெட்டியில் கூட வைத்து பரிமாறலாம்.