மாம்பழத்தில் சப்பாத்தி செய்யலாம்: எப்படித் தெரியுமா?
மாம்பழத்தில் இனிப்பு, புளிப்பு, காரம் என எல்லாம் கலந்து தான் இருக்கும். மேலும் மாம்பழத்தில் அதிக சத்துக்களும் மருத்துவ நன்மைகளும் அதிகம் இருக்கிறது.
மாம்பழத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு குறைந்தே காணப்படுகிறது. இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது.
இந்த மாம்பழத்தில் சப்பாத்தி செய்து சாப்பிட்டால் இன்னும் அதிக சத்துக்கள் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
மாம்பழம் - 1
சீரகப்பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1/4
தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
நெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
மாம்பழத்தில் இருக்கும் சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பிறகு கோதுமை மாவில் சீரகத்தூள், உப்பு தூள், மிளகாய் தூள் என்பனவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அதன்பிறகு மாம்பழச் சதையை தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளுங்கள்.
பிசைந்து வைத்த மாம்பழத்தை அரை மணிநேரம் ஊற வைத்து திரட்டி கல்லில் நெய் அல்லது எண்ணேய் ஊற்றி சுட்டு எடுத்தால் மாம்பழச் சப்பாத்தி தயார்.