நயன்தாரா திருமண ஸ்பெஷல் பலாப்பழ பிரியாணி! செய்வது எப்படி?
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை ரசித்து ருசித்து சாப்பிடாதவர்கள் இருக்க முடியாது, இதன் பூர்வீகம் எதுவென்று இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது, பலா காயாக இருந்தாலும் சரி, பழமாக இருந்தாலும் சரி இதில் பலவிதமான உணவுகளை சமைக்கலாம்.
பலாப்பழத்தில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தயாமின், ரைபோஃபிளோவின், நியாசின், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம், குளோரின், கந்தகம், கரோட்டின், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.
உடனடியாக நமக்கு ஆற்றலை தரக்கூடிய பலாப்பழத்தை வெறுமனே சாப்பிடுவதை விட, தேன், நெய், வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டால் சத்துக்களை அப்படியே பெறலாம்.
இந்த பதிவில் பலாப்பழத்தை கொண்டு ருசியான பிரியாணி செய்வது எப்படி என பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
பிரியாணி அரிசி- 2 கப்
பலாப்பழம்
வெங்காயம்- நீளவாக்கில் நறுக்கியது
தக்காளி- நறுக்கியது
இஞ்சி விழுது
பச்சை மிளகாய்
தயிர்- அரை கப்
நெய்- 2 டீஸ்பூன்
கரம் மசாலா- தேவையான அளவு
புதினா, கொத்தமல்லி- தேவையான அளவு
செய்முறை
வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி, ஏலக்காய், பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு மற்றும் வெங்காயம், இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
இதனுடன் கரம் மசாலா சேர்த்து வதக்கவும், பச்சை வாசனை போன பின்னர் தக்காளி சேர்த்து, தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் கொத்தமல்லி, புதினா தழை சேர்த்து நன்றாக வதக்கவும், இதனுடன் அரிசிக்கு ஏற்றளவு தண்ணீர் சேர்த்து, பலாப்பழத்தை சேர்க்கவும்.
நன்றாக கொதி வந்த பின்னர் அரிசியை சேர்த்து வேகவைத்து இறக்கினால் சுவையான பலாப்பழ பிரியாணி தயார்!!!