மணத்தக்காளி மருத்துவ நன்மைகள் - சிறிதாக இருந்தாலும் பாரிய நோய்களையும் விரட்டும்
மணத்தக்காளி கீரையில் பல நோய்களை விரட்டும் அற்புத சக்தி உள்ளது. அதை விரிவாக பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
மணத்தக்காளி மருத்துவ நன்மைகள்
பொதுவாக கீரை எடுத்துக்கொண்டால் எல்லா கீரைகளிலும் அதிக சத்துக்கள் இருக்கும். ஆனால் பலரும் அறியாத மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி கீரை பற்றி யாருக்கெல்லாம் தெரியும்.
அப்படி என்ன சத்து இந்த கீரையில் இருக்கிறது என்ற கே்வி உங்களுக்கு வரும்.
மணத்தக்காளி கீரையில் வைட்டமின்கள்ஏ,சி,D மற்றும் E சத்துகளும் தாதுக்களில்,கால்சியம்,பொட்டாசியம்,இரும்புச்சத்து,பாஸ்பரஸ் மற்ற சத்துக்களில் நார்ச்சத்து,புரதம்,கார்போஹைட்ரேட்டுகள், ஃபிளாவனாய்டுகள்,பீனாலிக் கலவைகள்,நைட்ரிக் ஆக்சைடு உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
என்ன நோய்கள் குணமாக்கும்
முக்கியமாக மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண்கள் மற்றும் குடல் புண்கள் விரைவில் குணமாகும். இதை தான் நாம் அல்சர் என்று கூறுவோம்.
இது பொல்லாத நோய். இது முற்றினால் உயிரையும் காவு வாங்க நேரிடும். பலரும்தொட்டை வரண்டு போகும் அளவிற்கு பேசுவார்கள்.
இதனால் தொண்டை வறண்டு சளி வீக்கம் வலி போன்றவை ஏற்படும் இந்த நேரத்தில் மணத்தக்காளி கீரையை வாயில் வைத்து மென்று சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் இல்லாமல் போகும்.
மணத்தக்காளி கீரையை சாறாக எடுத்து தினமும் மூன்று வேளை 30 மில்லி அளவு குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாக பிரியும்.இதில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
சிலர் அதிகமாக எப்பு சாப்பிடுவார்கள். இந்த உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து கற்களை உருவாக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் வர சளி, இருமல் போன்ற கப நோய்கள் விலகும்.
உடலுக்கு ஆதாரமாக இருக்கும் கலடலீரல் பிரச்சனையை இது விலக்கும். அதாவது கல்லீரலில் கொடுப்பு படிதல் நச்சுக்கள் சேருதல் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் போகும்.
கல்லீரலை இந்த கீரை சுத்தமாக வைத்திருக்கும். இது தவிர தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் சரும பளபளப்பு அதிகரித்து உடல் சூடு குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |