30 ஆண்டுக்கு முன் இறந்தவர்களுக்கு நடந்த வினோத திருமணம் - காரணம் என்ன?
30 ஆண்டுக்கு முன் இறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்த வினோத திருமணம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
கர்நாடகா மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் ஒரு வினோதமான திருமண சடங்கை நடத்துகின்றனர். அது, என்னவெனில், 30 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

பிரேத திருமணம்
இந்த சடங்கை ’பிரேத கல்யாணம்’ என்றழைப்பர். பிறக்கும் போதே இறக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும், இது போன்ற சடங்குகளை நடத்துகின்றனர்.
திருமணத்திற்கு சராசரியான வயது 30 என்பதால் இந்த பகுதியி 30 ஆண்டுக்கு முன்னர் உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு அந்த குடும்பத்தினர்கள் திருமண விழாவை செய்து வைக்கின்றனர்.
இதற்கு காரணமே இவர்களின் ஆன்மாவைப் போற்றி சாந்தியடையச் செய்யும் விதமாக இந்த திருமண சடங்கை அவர்களுக்கு செய்கிறார்கள்.
Everyone in the family come and bless the newlyweds. pic.twitter.com/ZoIYe2DAHI
— AnnyArun (@anny_arun) July 28, 2022
விருந்து
திருமண விருந்து உணவாக மீன் வறுவல், சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி உள்ளிட்ட பல வகையான உணவுகளை அங்கு விருந்தாகப் படைக்கின்றனர். யூடியூபரான அன்னி அருண் என்பவர் இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சடங்கினை கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பின்பற்றி வருகின்றனர்.
Finally the bride's family passing the responsibility of their daughter to the grooms family. Usually the most emotional part of the marriage ceremony. pic.twitter.com/giEZtOl2fa
— AnnyArun (@anny_arun) July 28, 2022