viral video: பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு அசால்ட்டாக சாப்பிடும் நபர்... இறுதியில் என்ன நடந்தது?
நபரொருவர் Emerald Tree Boa எனப்படும் பச்சை நிற பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு அசால்ட்டாக உணவருந்தும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
மரகத மர போவா (அல்லது பச்சை மர போவா) என்பது ஒரு விஷத்தன்மை அற்ற போவா வகையைச் சேர்ந்த பாம்பு இனமாகும். இது பச்சை நிறத்தில் வசீகரிக்கும் அழகிய தோற்றத்தில் காணப்படும்.
இது பெரும்பாலும் பச்சை மரங்களிலேயே வாழ்கின்றது. இப்பாம்பு தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் அதிகமாக காணப்படுகிறது.
இதன் சிற்றினங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. சுமார் 6 அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த பாம்பு இனம், தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் பரவலாக கொலம்பியா, ஈக்வெடார், பெரு, பிரேசில், வெனிசுவேலா, சுரினாம் ஆகிய பகுதிகளில் அதிகம் காணக்கூடியதாக இருக்கும்.
நபரொருவர் இந்த மரகத மர போவாவை கழுத்தில் சுற்றிக்கொண்டு நண்பருடன் சாப்பிடுவது போல் அசால்ட்டாக சாப்பிடும் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |