91 நாடுகளை சுற்றி உலகின் மோசமான கழிவறையை கண்டுப்பிடித்த நபர்! காரணம் என்ன?
உலகின் மோசமான கழிப்பறையை தேடி பயணத்தில், பிரிட்டனை சேர்ந்த நபர் கண்டுபிடித்து புத்தகம் எழுதியுள்ளார்.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிரஹாம் அஸ்கி (Graham Askey)58. என்பவர் blog ஒன்றை நடத்தி வருகிறார். அதன்படி உலகத்தின் மிகவும் மோசமான கழிவறையை கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன் இவர் தனது பயணத்தை துவங்கியிருக்கிறார்.
இதற்காகவே அவர், 91 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஏராளமான மலைப்பிரதேசங்கள், குக்கிராமங்கள், அசாதாரண வானிலை கொண்ட இடங்கள் என இவருடைய நெடும்பயணம் தொடர்ந்திருக்கிறது.
இறுதியில் உலகின் மிகவும் மோசமான கழிவறையையும் அவர் கண்டுபிடித்திருக்கிறார். இந்த பயணத்திற்காகவே அவர் இந்திய மதிப்பின் படி சுமார் 1.3 கோடி ரூபாய்) செலவழித்திருக்கிறார்.
இந்த அனுபவங்களை கொண்டு அவர் த்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். அதில், தான் சந்தித்த வினோதமான கழிப்பறைகள் அனுபவம் பற்றி குறிப்பிட்டுள்ளார் கிரஹாம் அஸ்கி. மேலும், இந்த புத்தகத்திற்கு 'டாய்லெட்ஸ் ஆஃப் தி வைல்ட் ஃபிரான்டியர்' எனவும் பெயரிட்டிருக்கிறார்.
இதுகுறித்து, அவர் பேசுகையில், “நான் ஒருமுறை மொராக்கோவுக்கு சென்றபோது அங்கிருந்த கழிப்பறை கட்டுமானத்தின் மோசமான தன்மை என்னை ஈர்த்தது.
அதனை தொடர்ந்து, விடுமுறை நாட்களில் உலகின் மோசமான கழிப்பறை எது என்பதை தேட நினைத்தேன்.
இந்த அனுபவத்தை டாய்லெட்ஸ் ஆஃப் தி வைல்ட் ஃபிரான்டியர் என்ற புத்தகமாக எழுதியிருக்கிறேன்" என்கிறார்.