88வது திருமணத்துக்கு தயாரான தாத்தா! அந்த மணப்பெண் யார் தெரியுமா?
இந்தோனேசியாவை சேர்ந்த 61 வயதான நபர் 88வது முறையாக திருமணம் செய்யவிருக்கிறார்.
இதன்மூலம் மேற்கு ஜாவாவிலுள்ள மஜலெங்காவை சேர்ந்த கான் என்பவர் ’ப்ளே பாய் கிங்’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது 88வது முறை திருமணம் நடைபெறவிருக்கிறது.
முதன்முதலில் இவருக்கு திருமணம் ஆகும்போது இவருடைய வயது 14. அப்போது அவரைவிட 2 வயது பெரிய பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். இரண்டு வருடம் ஒன்றாக வாழ்ந்த இவர்களுடைய திருமண வாழ்க்கை கசந்துபோகவே விவாகரத்து கேட்டுள்ளார் முதல் மனைவி.
அங்கிருந்து தொடங்கியிருக்கிறது கானின் திருமண பட்டியல். கான் கூறுகையில், முதல் மனைவியிடம் எனது மோசமான அணுகுமுறையால் அவர் இரண்டே வருடத்தில் என்னிடமிருந்து விவாகரத்து கேட்டார்.
shikshanews
பெண்களுக்கு நல்லது செய்யாத விஷயங்களை நான் செய்ய விரும்பவில்லை. நான் அவர்களின் உணர்வுகளுடன் விளையாட மறுக்கிறேன். ஆனால் ஒழுக்கமற்று நடந்துகொள்வதைவிட திருமணம் செய்வது சிறந்தது.
இப்போது நான் மீண்டும் திருமணம் செய்யவுள்ள பெண் எனது 86வது மனைவி. நாங்கள் வெறும் இரண்டே மாதங்கள் ஒன்றாக இருந்து நீண்ட நாட்களுக்கு முன்பே பிரிந்துவிட்டாலும், அவர் மீண்டும் என்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என தலைகீழாக நிற்கிறார் என்கிறார்.
மேலும் தனக்கு ஏற்படும் கோபத்தில் இருந்து மீண்டு பல பெண்களுக்கு தன்மீது ஈர்ப்புவர ஆன்மிகத்தின் உதவியை நாடியதாகவும் கூறுகிறார் கான். கானுக்கு 87 திருமணங்களில் எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.