லட்சங்களில் சம்பளத்தை உதறிவிட்டு கழுதை பால் விற்கும் நபர்! லாபம் எவ்வளவு தெரியுமா?
ஐடி பணியை ராஜினாமா செய்து விட்டு கழுதை பண்ணை திறந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
மங்களூருவை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கவுடா ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், ஸ்ரீநிவாஸ் கவுடா கழுதை பண்ணை திறப்பதற்காக தனது ஐடி பணியை ராஜினாமா செய்துள்ளார்.

கழுதை பால் வியாபாரத்தில் இவ்வளவு லாபமா?
தற்போது, ஸ்ரீநிவாஸ் கவுடா மங்களூருவில் கழுதை பண்ணை வைத்து கழுதை பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இதுகுறித்து பண்ணை உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் கவுடா கூறியதாவது,
நான் முன்பு 2020-ம் ஆண்டு வரை ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். இது இந்தியாவிலும் கர்நாடகாவிலும் உள்ள முதல் கழுதை வளர்ப்பு மற்றும் பயிற்சி மையம் ஆகும்.
Karnataka | A man quits his IT job to open a 'Donkey Milk Farm' in Mangaluru
— ANI (@ANI) June 16, 2022
I was previously employed in a software firm until 2020. This is one of a kind in India and Karnataka's first donkey farming and training center: Srinivas Gowda, farm owner pic.twitter.com/pLvrnWCV1j
தற்போது எங்களிடம் 20 கழுதைகள் உள்ளன. நான் சுமார் 42 லட்சம் ரூபாய் மூதலீடு செய்துள்ளேன். அதிக நன்மைகள் உள்ள கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
கழுதைப்பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கனவு.
கழுதைப்பால் பல நன்மைகள் கொண்ட மருந்தாகும் என்றும் மால்கள், கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இந்த கழுதை பால் பாக்கெட்டுகள் கிடைக்கும்.
ஏற்கனவே 17 லட்சம் மதிப்புள்ள ஆர்டர்கள் கிடைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.