“என்னை திருமணம் செய்து கொள்வாயா”? - சுறாக்களை ரசித்த காதலிக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!
லண்டன்: இங்கிலாந்தில் சுறா மீன்கள் மீது அலாதி பிரியம் கொண்ட தனது காதலிக்கு, இளைஞர் ஒருவர் சுறாக்கள் நீந்திக் கொண்டிருந்த நீர்த் தொட்டிக்குள்ளேயே திருமணத்தை முன்வைத்து காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்தின் லிங்கன்ஷயர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் வால்ஷ். இவரது காதலி பேஜ் குக். சிறு வயது முதலே சுறா மீன்கள் என்றால் பேஜிற்கு மிகவும் பிடிக்கும். இதை அறிந்த ஜேம்ஸ், கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, ஸ்கெக்னஸ் அக்வாரியத்தில் சுறாக்களுடன் நீந்துவதற்கான சிறப்பு டிக்கெட்டை அவருக்கு பரிசாக வழங்கியிருந்தார்.

நீருக்கடியில் நிகழ்ந்த ஆச்சரியம்
திட்டமிட்டபடி, கடந்த 10-ம் தேதி இருவரும் ஸ்கூபா கியர் மற்றும் வெட்சூட் அணிந்து, சுறாக்கள் நிறைந்த அக்வாரியத்தின் பிரதான தொட்டிக்குள் இறங்கினர்.
பேஜ் சுறாக்களை ரசித்துக் கொண்டிருந்தபோது, ஜேம்ஸ் திடீரென தனது கையில் வைத்திருந்த ஒரு பலகையை அவரிடம் காட்டினார். அதில், “என்னை திருமணம் செய்து கொள்வாயா?” (Will you marry me?) என்று எழுதப்பட்டிருந்தது.

அதனுடன், மோதிரத்தையும் காட்டி தனது காதலை வெளிப்படுத்தினார். காதலியின் ரியாக்ஷன் சுறாக்கள் தங்களைச் சுற்றி நீந்திக் கொண்டிருந்த நிலையில், காதலனின் எதிர்பாராத திருமண முன்மொழிவைக் கண்டு பேஜ் சில நொடிகள் ஆச்சரியத்தில் உறைந்துபோனார்.
பின்னர், நீருக்கடியில் தனது மகிழ்ச்சியை ‘ஓகே’ சைகை மூலம் வெளிப்படுத்தி, ஜேம்ஸின் திருமண முன்மொழிவை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, நீருக்குள்ளேயே பேஜிற்கு மோதிரம் அணிவித்தார் ஜேம்ஸ்.

இதுகுறித்து மகிழ்ச்சியுடன் பேசிய பேஜ் குக், “சுறாக்கள் என் அருகிலேயே நீந்திக் கொண்டிருந்தன. ஆனால் அந்த நேரத்தில் என் கவனம் முழுவதும் ஜேம்ஸ் காட்டிய பலகை மற்றும் மோதிரத்தின் மீதுதான் இருந்தது.இது என் வாழ்நாளின் மிகச்சிறந்த நாள்” என்று தெரிவித்துள்ளார்.
சுறா தொட்டிக்குள் நடைபெற்ற இந்த வித்தியாசமான காதல் முன்மொழிவின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Man Proposes to Girlfriend Underwater in Shark Tank, Hides Engagement Ring in His Wetsuit https://t.co/JKCHtFyOS2
— People (@people) September 21, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |