எங்கு பார்த்தாலும் சமாதிகள்!! நடுவே வசிக்கும் நபர்- நெஞ்சை உருக்கும் உண்மை
தமிழகத்தில் வயது முதிர்ந்த நபர் ஒருவர், 40 சமாதிகளுக்கு நடுவே வாழும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிவகங்கையின் பருத்தி கண்மாய் ஊரை சேர்ந்தவர் தங்கசாமி(வயது 77), திருமணம் செய்து கொள்ளவில்லை.
எனவே தன்னந்தனியாக வசித்து வரும் தங்கசாமிக்கு ஆறுதல் இருப்பது அவ்வூரை சேர்ந்த நாய்கள் தானாம்.
எந்த வருமானமும் இல்லாமல் அரசின் உதவித்தொகையை மட்டுமே நம்பி வாழும் தங்கசாமியை பாதுகாத்து வருகின்றது தெருநாய்கள்.

அந்த பணத்தையும் நாய்களுக்காகவே செலவிடுவாராம் தங்கசாமி, சுமார் 40 நாய்களை வளர்த்து வந்த தங்கசாமியிடம் தற்போது ஒரே ஒரு நாய் மட்டுமே மிஞ்சியுள்ளதாம்.
ஸ்ரீதேவி, சரிதா, துரைசாமி, நல்லம்மா, வெள்ளச்சி என்று அந்த நாய்களுக்கு பெயர் வைத்து அழைத்து வந்திருக்கிறார்.
இறந்து போன நாய்களை எங்கேயும் தூக்கிப்போடாமல், தன் வீட்டை சுற்றியே புதைத்து வைத்துள்ளாராம் தங்கசாமி.