ஒற்றை விரலில் 129 கிலோ எடையை தூக்கிய மனிதர்! பிரமிக்க வைக்கும் புகைப்படம்
பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது ஒற்றை விரலினால் 129.50 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்துள்ளார்.
8 நொடிகளில் நிகழ்த்திய சாதனை
பிரிட்டனை சேர்ந்த Steve Keeler(48). இவர் தம்முடைய நடுவிரலை மட்டுமே பயன்படுத்தி 129.50 கிலோ (285.49 எல்பி) எடையை 8 வினாடிகளுக்கு தூக்கி சாதனை படைத்துள்ளார்.
குறித்த நிகழ்வு நம்பமுடியாததாக இருந்தாலும், நபர் எவ்வாறான முயற்சியினை மேற்கொண்டுள்ளார் என்பதையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஸ்டீவ் கூறுகையில், இது நம்ப முடியாத அளவுக்கு தனக்கு இருந்ததாகவும், அதே சமயத்தில் இப்படி செய்யும்போது மிகவும் கஷ்டமாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே மற்றவர்கள் இதை முயற்சிப்பதற்கு பயிற்சி வேண்டும், இல்லையேல் முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் அன்போடு கூறியுள்ளார்.
குறிப்பாக விரல்கள் வலுவாக இருப்பதாகவும், தான் இவ்வாறு இவ்வளவு பெரிய எடையை லிப்ட் பண்ணியதற்காக பெருமைப்படுவதாகவும் கூறியதுடன் தன்னுடைய சாதனையைப் பற்றியும் கூறுகிறார்.

நான்கு வருட விடாமுயற்சி
தற்காப்பு கலைஞரான Steve Keeler, 2022 பிப்ரவரி மாதம் முதல் இதை முயற்சித்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட 10 க்கும் அதிகமான எடையைத் தூக்கி, ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட ஒரு சாதனையை முன்பாக முறியடித்தார்.
இப்படி 10 கிலோ, 20 கிலோ, 26 கிலோ என ஒரே நேரத்தில் படிப்படியாக செய்து, இப்போது இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். இந்த சாதனையை அவர் படைப்பதற்கு அவருக்கு நான்கு வருடங்கள் எடுத்திருக்கின்றன.
தம்முடைய பதினெட்டு வயதில் இருந்தே கராத்தே பயிற்சி செய்து வரும் இவர் தம்முடைய கையும், எலும்பும் வலுவாக இருப்பதை அறிந்து இதை செய்யத் தொடங்கினார்.