நாயை தூக்கில் போட்டு சாகடித்து விட்டேன்... நபர் போட்ட டுவிட்! கொந்தளிக்க வைக்கும் காரணம்
தனக்கு தொல்லை கொடுத்த நாயை மனசாட்சி இன்றி கொலை செய்துள்ள நபர் தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் முத்துவேல். இவர் தனது முகநூல் பக்கத்தில் “எனக்கு ரொம்ப நாளாக தொல்லை கொடுத்த நாயே தூக்கில் போட்டு சாகடித்து விட்டேன்” என்று பதிவிட்டிருந்தார்.
அவரின் இந்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான விக்னேஷ் என்பவர் மாவட்ட கண்காணிப்பாளர் அபிநவ்யிடம் புகார் அளித்துள்ளார்.
குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், என்னுடைய வீட்டு பக்கத்தில் நாய் போன்று பல நாட்களாக தொந்தரவு செய்து வந்ததாகவும், அதனால் இந்தச் செயலை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து முத்துவேல் மற்றும் அவருடைய நண்பர் ரமேஷ் ஆகியோரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.