40 முதலைகளிடம் சிக்கிய முதியவர்- துண்டு துண்டாக உடலை வெட்டி தின்ற அதிர்ச்சி சம்பவம்
கம்போடியாவில் 40 முதலைகளிடம் சிக்கிய முதியவரை, துண்டு துண்டாக உடலை வெட்டி தின்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதியவரை கொன்று தின்ற 40 முதலைகள்
தெற்காசிய நாடான கம்போடியாவில் லுவான் என்ற 72 வயது முதியவர் முதலைப் பண்ணைக்கு சென்றுள்ளார்.
இவர் முதலைப் பண்ணையில் நுழைந்து முதலைகளின் முட்டைகளை சேகரித்தார். பண்ணையில் முட்டைகளை சேகரிக்கும்போது முதலைகளை குச்சியால் விரட்டினார்.
அப்போது, திடீரென ஒரு முதலை அவர் குச்சியை இழுத்து தள்ளியது. இதில் லுவான் பண்ணையில் இருந்த முதலைகள் மத்தியில் விழுந்தார். அப்போது, சுமார் 40 முதலைகள் ஒன்று சேர்ந்து இவரை கொடூரமாக தாக்கியது.
இவருடைய உடல்களை துண்டு துண்டாக முதலைகள் கடித்து குதறின. இவருடைய கைகளை முதலைகள் கடித்து விழுங்கியது.
முதலைகள் தாக்கியதில் லுவான் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிதைந்து போன நிலையில் லுவானின் உடலை கைப்பற்றினர்.
கடந்த 2019ம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமியை முதலைகள் ஒன்று சேர்ந்து கொடூரமாக தாக்கி கொன்று தின்றன என்பது குறிப்பிடத்தக்கது.