இறந்த காதலனின் தாய்.. நிஜ தாயாகவே மாறிய காதலி... உலக மக்களையே வியக்க வைத்த இளம்பெண்!
காதலனின் தாய் இறந்த காரணத்தினால், காதலனுக்கு தாய் பாசம் கிடைக்க வேண்டும் என காதலி எடுத்து அதிர்ச்சி முடிவு பலரையும் வியக்க வைத்துள்ளது.
டிக் டாக்கில் ys.amri ஐடியில் இருந்து பெண் ஒருவர் இளைஞரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதனிடையே, அந்த பெண் காதலித்த காதலனின் தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
இதன்பின்னர், நடந்த அந்த ஒரு சம்பவம் தான், பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. அந்த பெண் காதலனுக்கு மனைவியாகி அம்மாவாக பார்த்துக்கொள்வார் என நினைத்தால், காதலனின் தந்தையை திருமணம் செய்து கொண்டு அம்மாவாகி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அந்த பெண் இணையதளத்தில் பதிவிட்டுள்ளதில், “என் காதலரின் அம்மா சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். என்னுடைய காதலர் அவரின் தாயார் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார்.
ஆனால் அவரின் தாய் இறந்த பின் அந்த துக்கத்தை என் காதலானால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவர் முன்பு போல் இல்லை, எப்போதும் சோகமாகவே இருந்தார்.
என் காதலன் தாய் பாசத்தை இழந்து கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. மேலும், இதனால் இந்த சமூகத்தை மறந்து என் முடிவில், காதலனுக்கு அவர் இழந்த தாய் பாசத்தை கொடுக்க உண்மையான தாயாகவே மாற திட்டமிட்டுள்ளேன் காதலனின் தந்தையிடம் பேசி அவரை திருமணம் செய்து கொண்டேன்.
அவருக்கு இழந்த தாய் பாசத்தை நான் மீண்டும் கொடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு அவரின் மகிழ்ச்சி ரொம்ப முக்கியம்” என பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் உலகம் முழுவதும் பரவி பலரிடம் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        