ஆடி வெள்ளியில் தவறியும் வாங்கக்கூடாத பொருட்கள்.., என்னென்ன தெரியுமா?
பொதுவாக, ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அம்மன் மற்றும் மகாலட்சுமி வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாட்களாகும்.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சக்தி ஸ்தலங்களிலும் வீடுகளிலும் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.
குடும்ப நலனுக்காகவும் செல்வ வளம் பெருகவும் பெண்கள் கூழ் வார்த்தல் மற்றும் விளக்கு பூஜை செய்கின்றனர்.
இத்திருநாட்களில் அம்மன் வழிபாடு, கூழ் வார்த்தல் மற்றும் தீபம் ஏற்றுதல் ஆகியவை முக்கியமாகச் செய்யப்படுகின்றன.
அந்தவகையில், ஆடி வெள்ளியில் தவறியும் வாங்கக்கூடாத பொருட்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
என்னென்ன பொருட்கள் வாங்கக்கூடாது?
ஆடி வெள்ளிக்கிழமையில் ஊசி, கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை வாங்கக்கூடாது.
அன்றைய தினம் கருப்பு நிற ஆடைகளை அணிய கூடாது மற்றும் பழைய பொருட்களை வாங்கக்கூடாது.
வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு உப்பு, தயிர், பணம் போன்றவற்றை யாருக்கும் கடனாக கொடுக்ககூடாது.
அதேபோல், ஆடி வெள்ளியில் இரவு நேரத்தில் வீட்டைப் பெருக்கி குப்பையை வெளியில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், பூஜை செய்ய தேவையான பொருட்களை வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யக்கூடாது.