உயிருள்ள பாம்பை மூக்கில் நுழைத்து வாயில் எடுக்கும் நபர்! ஓர் திகில் வீடியோ
பாம்புகள் என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள், பாம்பு என்றாலே பெரும்பாலும் பயப்படுபவர்கள் தான் அதிகம்.
ஆனால் அந்த பாம்பையே விளையாட்டு பொருளாக பயன்படுத்தும் நபர்களை பற்றியும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
அந்த வகையில், நபர் ஒருவர் உயிருள்ள பாம்பு குட்டியை மூக்கில் நுழைத்து வாய் வழியாக எடுக்கிறார்.
பிரபல நடிகரான Vidyut Jammwal இன்ஸ்டாவில் பகிர்ந்த இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
அந்த வீடியோவில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் நபர் ஒருவர் தன்னுடைய கண்களை மூடிக்கொண்டு உயிருள்ள பாம்பின் தலையை மூக்கின் வழியாக நுழைக்கிறார்.
சிறிதுநேரத்தில் வாயின் வழியாக பாம்பை எடுப்பதுடன் வீடியோ முடிகிறது.
ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற இந்த வீடியோவுக்கு, பலரும் வன்மையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.