சில்மிஷம் செய்த நபரை விடாமல் துரத்திய பெண்! இறுதியில் கொடுத்த தண்டனை
தமிழகத்தில் மதுரை பேருந்து நிலையத்தில் குடிபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை இளம்பெண் அடித்து துவைத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குடிபோதையில் நபர்
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பரபரப்பாக காணப்படும்.
இங்கு நேற்று மாலையில் பணி முடிந்துவிட்டு வீட்டிற்கு செல்லவிருந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் குடிபோதையில் இருந்த நபர் தவறாக நடந்து கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
தாயின் அஜாக்கிரதை! கதறி துடித்த 2 வயது சிறுவன் பலியான சோகம்
விரட்டிப் பிடித்த பெண்
இதனால் ஆத்திரமடைந்த பெண் அந்த நபரை பெரியார் பேருந்து நிலையத்தின் நடைமேடைகளில் துரத்தி சென்று அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்த நபர் களிமங்கலத்தைச் சேர்ந்த கணேசன்(36) என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பெரியார் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த திடீர் நகர் போலீசார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தவறு செய்த நபரை துணிச்சலுடன் தட்டிக் கேட்ட பெண்ணின் செயலை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.