மனைவியை நண்பருக்கு விருந்தாக்கிய கணவர்: அந்தரங்க பகுதியில் மிளகாய்பொடி போட்டு சித்ரவதை
இந்தியாவில் மனைவியை வரதட்சணைக்காக நண்பரை விட்டு வன்கொடுமை செய்யக் கோரிய கணவர் மற்றும் மாமியாரைப் பொலிசார் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் உள்ள பசேரி கிராமத்தில் 20 வயதான பெண்ணொருவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்ப கணவரும், அவரது மாமியாரும் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். குறித்த பெண் தனது பெற்றோரால் கொடுக்கமுடியாது என்று கூறியுள்ளார்.
ஆனால் பெண்ணின் பேச்சை காதில் வாங்கிக்கொள்ளாத கணவர் அதிகமாக கொடுமைப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி தனது நண்பரை வீட்டிற்கு வரவழைத்து மனைவியை வன்கொடுமை செய்யவும் துணையாக இருந்துள்ளார்.
குறித்த நண்பர் மனைவியின் அந்தரங்க பகுதியில் மிளகாய் பொடியைப் போட்டு கொடுமை செய்துள்ளதையடுத்து, பொறுத்துக்கொள்ள முடியாத பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மாமியாரின் கொடுமை மற்றும் கணவரின் கீழ்தரமான செயல் அனைத்தையும் பொலிசாரிடம் கூறி புகார் அளித்ததையடுத்து, பொலிசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததோடு, அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சையளிக்கவும் செய்துள்ளனர்.
ஆனால் வழக்கும் பதிவுசெய்துள்ளதை அறிந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது மாமியார் உட்பட குடும்பத்தினர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்றவர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.