சாலையில் கிடந்த 20 டாலரால் ஆறு லட்சம் டாலருக்கு சொந்தக்காரரான நபர்... நடந்தது என்ன?
அமெரிக்காவில் நபர் ஒருவர் கீழே கிடந்த 20 டாலருக்கு லாட்டரி வாங்கியதில் அதில் மில்லியன் டாலர் பரிசு அடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்
அமெரிக்காவின் வட கரோலினாவில் பேனர் எல்க்சின் தலைசிறந்த தச்சரான ஜெர்ரி ஹிக்ஸ் கடந்த 22ம் தேதி கடைக்கு சென்றுள்ளார்.
ஸ்பீட்வேக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் 20 டாலர் கீழே கிடப்பதை பார்த்துள்ளார். அதை எடுத்துக் கொண்டு பூனில் உள்ள NC 105 இல் ஸ்பீட்வேயில் நடந்து, ஒரு எக்ஸ்ட்ரீம் கேஷ் ஸ்கிராட்ச்-ஆஃப் வாங்கினார்.
ஆனால் ஜெர்ரி ஹிக்ஸ் தேடிய டிக்கெட் அவர்களிடம் இல்லாத நிலையில், அதற்கு பதிலாகவே எக்ஸ்ட்ரீம் கேஷ் ஸ்கிராட்ச் ஆஃப்பை சீட்டை வாங்கியுள்ளார்.
image: nclottery.com
இந்த லாட்டரி டிக்கெட்டிற்கு 1 மில்லியன் டாலர் ஜாக்பாட் அடித்துள்ளது. மேலும் ஜெர்ரிக்கு பரிசுத் தொகையில் இரண்டு விருப்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
அது என்னவெனில் ஆண்டுக்கு 50 ஆயிரம் டாலர் வீதம் 20 ஆண்டுகளுக்கு கிடைக்குமாம் மற்றொரு விருப்பம் என்னவெனில் மொத்த தொகையும் 6 லட்சம் டாலர் என்பதாகும்.
ஜெர்ரி இரண்டாவது விருப்பத்தை தெரிவு செய்துள்ள நிலையில், இவருக்கு வரி பிடித்தம் போக 4,29,007 டாலர் கிடைத்துள்ளது.
ஜெர்ரி 56 ஆண்டுகள் தச்சராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது ஓய்வு எடுக்கவும், தான் பெற்ற தொகையினை வைத்து சில திட்டங்களையும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |