நேரடியாக பசுவின் மடியில் இருந்து பால் குடிக்கும் குழந்தை! ஷாக்கிங் வீடியோ
குழந்தை ஒன்றை நேரடியாக பசுவின் மடியில் இருந்து நபர் ஒருவர் பால் குடிக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், 6 மாதங்களுக்கு பின்னரே இணை உணவுகள் சேர்த்து வழங்கப்படும்.
ஆனால் குறித்த வீடியோவில், நபர் ஒருவர் நேரடியாக பசுவின் மடியிலிருந்து குழந்தை பால் குடிக்க வைக்கிறார்.
Is this good for a baby? Please answer pic.twitter.com/8wXKBvofaO
— Aulia dr (@DonaldTunp75739) July 21, 2025
X தளத்தில் வெளியான வீடியோ வைரலான நிலையில், பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மாட்டுப்பாலில் பக்டீரியாக்கள் அதிகம் இருக்கும், குழந்தைக்கு இது பாதுகாப்பானது இல்லை, கொதிக்க வைத்தால் மட்டுமே பாலில் உள்ள பக்டீரியாக்கள் அழிந்து போகும், குழந்தைக்கு இது ஆபத்தாக முடியலாம் என்பது போன்ற கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.