இரு... இரு... தருகிறேன்... - ஆழ்கடலில் ராட்சத மீனுக்கு உணவளித்த நபர் - அபூர்வ வீடியோ!
ஆழ்கடலில் ராட்சத மீனுக்கு உணவளித்த நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆழ்கடலில் ராட்சத மீனுக்கு உணவளித்த நபர்
தினமும் ஏதாவது நிகழ்ச்சி நம்மைச் சுற்றி நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிறது. ஆனால், ஒரு சில வீடியோக்கள் தான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும்.
அதுபோல், ஒரு நபர் ஆழ்கடலில் ராட்சத மீனுக்கு உணவு கொடுத்துள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஆழ்கடலில் ஒருவர் சுத்தியை எடுத்து சங்கு ஒன்றை உடைக்கிறார். அந்த சங்கை உடைக்கும்போது, ராட்சத மீன் அந்த நபரிடம் வந்து நின்றது. அந்த சங்கை உடைப்பதற்குள் பசியால் அந்த மீன் அவரிடம் பதறுகிறது.
உடனே இரு.. இரு.. உடைத்து தருகிறேன் என்பது போல் அந்த நபர் சைகை செய்து அந்த மீனை நகர்த்துகிறார். அதன் பிறகு, சங்கை உடைத்து அதிலிருந்த சதையை எடுத்து அந்த மீனிற்கு கொடுக்கிறார். அந்த உணவை சாப்பிட்ட மீன் அந்த நபரிடமிருந்து தகர்ந்து செல்கிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
— CCTV IDIOTS (@cctvidiots) May 26, 2023