சீறிய விஷப்பாம்பை அசால்டாக பிடித்த நபர்... பயமுறுத்தும் காணொளி
குடியிருப்பு பகுதியின் கூரை மீது சீறிய விஷப்பாம்பு ஒன்றினை நபர் ஒருவர் அசால்டாக பிடித்துள்ள காட்சி பார்வையாளர்களை பயமுறுத்தியுள்ளது.
மனிதரிடம் சீறிய பாம்பு
பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இனங்கள் மனிதர்களை கடிக்கும் போது இறக்கும் நிலைகூட ஏற்படுகின்றது.
ஆனால் பாம்புகளின் வேட்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் நிலையில் இருக்கும். பாம்புகள் தவளை, மற்றொரு பாம்பை வேட்டையாடுவதை நாம் அவதானித்திருப்போம்.

சிலர் பாம்புகளை பிடித்துக் கொண்டு சுற்றி நிற்பவர்கள் முன்பு கெத்து காட்ட நினைப்பவர்கள். இங்கு நபர் ஒருவர் குடியிருப்பு பகுதியில் மக்களை அச்சுறுத்திய பாம்பை அசால்டாக பிடித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஆக்ரோஷத்தினை காட்டி குறித்த பாம்பு பயங்கரமாக சீறியுள்ளது. ஆனால் இளைஞர் எந்தவொரு பயத்தையும் காட்டாமல் மிகவும் பாதுகாப்பாக பாம்பை பிடித்து டப்பாவில் அடைத்துள்ளார்.
டப்பாவில் அடைக்கும் முன்பு அங்கு சுற்றியிருந்தவர்கள் அனைவரையும் பயத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்லவும் செய்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |