சித்திரையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாதா? முழுவிபரம் இதோ
சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று கூறுவதற்கு பின்னணி காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சித்திரை
பொதுவாக குழந்தை பிறக்கும் மாதத்தினைக் கொண்டு, அதன் குணத்தினையும், எதிர்பால ஆளுமையையும் கணிப்பதுண்டு.
ஆனால் சித்திரை மாதம் என்றால் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள். ஆம் சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்றும் பெற்றோர்கள் தெருவில் நிற்பார்கள் என்றும் முன்னோர்கள் கூறுவார்கள்.

இதற்காக பலரும் பயந்து சித்திரை மாதத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. அவ்வாறு பெற்றெடுத்தால் பரிகாரத்தினை தேடுகின்றனர்.
சித்திரை மாதம் குழந்தை பிறக்கக்கூடாது என்பதற்காகவே ஆடி மாதத்தில் தம்பதியினரை பிரித்து வைப்பது வழக்கமாக இருக்கின்றது. ஏனெனில் ஆடி மாதம் கர்ப்பம் தரித்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும் என்பதால் தான்.
ராமாயணம் கூறுவது என்ன?
ராமாயணத்தில் ராமன் அவதரித்தது சித்திரை மாதம் என்பதாலும், அவர் கானகம் சென்ற போது அவரது தந்தை தசரத சக்கரவர்த்தி மகனை பிரிந்த துக்கம் தாங்கமுடியாமல் உயிரைவிட்டுவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கதையை வைத்து தான் சித்திரையில் பையன் பிறந்தால் தகப்பன் தெருவிற்கு வரும் நிலை வரும் என்று நம்பப்படுகின்றது.
ஆனால் ராமாயணத்தினை ஆழ்ந்து படித்தவர்களுக்கே இதன் உண்மை புரியுமாம். அதாவது ராமர் கானகம் சென்ற போது தந்தை புத்திர சோத்தினால் தான் இறந்தார் என்று ராமரும் நம்பிக்கொண்டிருந்தாராம். ஆனால் வாய்மையையும், மரபையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்கே தசரதன் உயிரை துறந்தாராம்.
உண்மை காரணம் என்ன?
சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கக்கூடாது என்பதற்கு உண்மையான காரணம் என்னவெனில் அதிகமான வெப்பம் நிறந்த காலமாக இருப்பதால் தான்.
உஷ்ண காலத்தில் பிரசவம் என்பது கொடுமையானது என்றும் அக்னி நட்சத்திரமாக அமைந்துவிட்டால் பிரசவிக்கும் பெண்ணுக்கும், பிறக்கும் குழந்தைக்கும் வெப்பம் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தற்போதைய காலத்தை போன்று முந்தைய காலத்தில் ஏசி கிடையாது என்பதால் வெயில் காலங்களில் பிரசவிப்பதை தவிர்க்க இவ்வாறு முன்னோர்கள் கூறுகின்றனர்.

மேலும் சித்திரையில் வெப்பம் காரணமாக குழுந்தையை தூக்கிக் கொண்டு பெற்றோர்கள் குளிர்ந்த சூழ்நிலைக்காக வெளியே காற்று வாங்க நிற்பார்கள்... மேலும் சித்திரை வெயிலின் தாக்கத்தினால் குழந்தைக்கு முடியாமல் போகவும் வாய்ப்புள்ளது. இதனால் மருத்துவ செலவு அதிகமாகும் என்பதால் தான் இவ்வாறு கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |