இறந்த மகளின் சடலத்தை தோளில் சுமந்து வந்த தந்தை! நடந்தது என்ன?
மகளின் சடலத்தை மருத்துவமனையிலிருந்து 10 கிலோ மீற்றர் தந்தை சுமந்து வந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகள் சுரேகாவை, அங்குள்ள சுகாதார மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட குறித்த சிறுமிக்கு ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்துள்ளது. இந்நிலையில் சுகாதார மருத்துவ மையத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உதவியை உறவினர்கள் கோரிய நிலையில், மற்றொரு சடலம் விரைவில் வரும் என்றும் அதுவரை காத்திருக்குமாறு அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இறந்த தமது மகளின் உடலை தோளில் சுமந்தவாறு ஈஸ்வர் தாஸ் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிராமத்தை நோக்கி சாலையில் நடந்து சென்றுள்ளார். இக்காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவிவரும் நிலையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மனிதர்களின் ரத்தத்தில் பிளாஸ்டிக்! ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த அதிர்ச்சி
Surguja: Chhattisgarh Health Min TS Singh Deo orders probe after video of a man carrying body of his daughter on his shoulders went viral
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 26, 2022
Concerned health official from Lakhanpur should have made the father understand to wait for hearse instead of letting him go, Deo said(25.3) pic.twitter.com/aN5li1PsCm