இறுதி சடங்கு செய்த பின்னும் உயிருடன் வந்த இளைஞன்: நடந்தது என்ன?
பீகார் மாநிலம் தர்பங்காவில் வசித்து வந்த 17 வயது இளைஞர் இறுதி சடங்கிற்கு பின்னரும் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞர்?
பீகார் மாநிலம் தர்பங்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த போலா குமார் என்ற 17 வயது சிறுவன் பிப்ரவரி 8-ம் தேதி காணாமல் போயுள்ளார்.
இதன் பின்னர் இவரின் பெற்றோர் தேடி அவர் எங்கும் கிடைக்காத காரணத்தின் அடிப்படையில் அவர்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
இதன் பின்னர் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதன் பின்னர் பிப்ரவரி 26-ம் தேதி அல்லல்பட்டி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உடலை யார் என அடையாளம் காண முடியாத நிலையில் இருந்துள்ளது. பின்னர் இது போலீஸாரால் இது காணாமல் போன போலா குமார் என குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பின்னர் குடும்பத்தினர் அனைவரும் இறுதி சடங்கு செய்து தகனம் செய்துள்ளனர். மேலும் ரயிலில் தான் இவர் விபத்தடைந்துள்ளார் என கூறி நிவாரண நிதியாக ரூ 4 லட்சம் குடும்பத்தார் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் இறந்துவிட்டதாக நினைத்த சிறுவன் போலா குமார், 70 நாட்களுக்குப் பிறகு உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.
இதனை கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தர்பங்கா மாவட்ட நீதிமன்றத்தில் சிறுவன் ஆஜராகி அவர் காணமல் போனதற்கு காரணம் தன்னை கடத்திவிட்டதாகக் கூறினார்.
“என்னை மூன்று நான்கு பேர் என்னை வலுக்கட்டாயமாக வாயை மூடி கடத்திச் சென்றனர் என” அந்த இளைஞர் கூறினார். “அவர்கள் நேபாளத்திற்கு கொண்டு சென்றதாகவும் அவர்களிடம் இருந்து தான் எப்படியோ தப்பி விட்டதாகவும்” இளைஞர் கூறினார்.
இதனை தொடர்ந்து தகனம் செய்த உடல் யாருடையது இளைஞன் எப்படி திரும்பி வந்தான் என இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |