சிகிச்சைக்கு வந்த மாணவி... பரிசோதனை செய்த மருத்துவருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி! உறவினர் வீட்டில் நடந்த கொடூரம்
உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்ற மாணவியை வன்புணர்வு செய்த 24 வயது இளைஞரை பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவி, உடல் நலம் பாதிக்கப்பட்ட கடந்த 19ம் தேதி எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவி கருத்தரித்து ஒரு வாரத்திற்கு முன்பு கருவை கலைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாணவியின் தாயாருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், பெற்றோர்கள் மாணவியிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது பிப்ரவரி மாதம் உறவினர் ஒருவரது வீட்டு விசேஷத்திற்கு சென்றிருந்திருந்த போது, எதிர்வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ள அரவிந்தன்(24) என்பவர் காதலிப்பதாக கூறியுள்ளார்.
பெயிண்டராக வேலை செய்யும் அவரின் ஆசை வார்த்தையினை நம்பிய மாணவியை வன்புணர்வு செய்துள்ளதாகவும், யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மாணவியின் தாயார் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, குறித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.