100 மில்லியன் பார்வைகளைக் கடந்த மல்லிப் பூ பாடல்!
அண்மையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகியது.
இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துமே அனைவராலும் ரசிக்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதிலும் குறிப்பாக, மல்லிப் பூ பாடல் அனைவரையும் கவர்ந்தது. அனைவரது வாயிலும் அந்தப் பாடல் முணுமுணுக்கப்பட்டது.
ரசிகர்களால் இந்தப் பாடல் ரீல்ஸ் செய்யப்பட்டு பட்டிதொட்டி எங்கும் களைகட்டியது. அதேநேரம் இந்த மல்லிப் பூ பாடலானது யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் உற்சாத்தில் உள்ளனர்.