விந்தணுக்களை குறைக்கும் உணவுகள்.. மறந்தும் இனி சாப்பிடாதீங்க- ஜாக்கிரதை
தற்போது இருந்து வரும் அவசர வாழ்க்கை முறையால் நமது ஆரோக்கியம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
அதிலும் குறிப்பாக, மன அழுத்தம் நிறைந்த பணியிடம் மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையினால் பலர் தங்களின் ஆரோக்கியத்தில் பெரிதாக கவனம் செலுத்துவது இல்லை. ஆரோக்கியம் என பார்க்கும் பொழுது சிலருக்கு விந்தணுக்களின் உற்பத்திலும் சில சிக்கல்கள் இருக்கும். இதனால் அவர்களால் உரிய நேரத்திற்கு குழந்தை பெற முடியாமல் மருத்துவ உதவியை நாடுவார்கள்.
மோசமான உணவுப் பழக்கத்தின் தாக்கம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும், கருவுறும் திறனிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
40 வயதை எட்டிய ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைப்பாட்டால் பெறும் இன்னல்களுக்கு முகங்கொடுக்கிறார்கள். இதற்கு ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகள் காரணமாக இருந்தாலும், உணவுகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன.
அந்த வகையில், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் அது குழந்தை பிறப்பில் தாக்கம் செலுத்தும். இது தொடர்பான விரிவான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
விந்தணுக்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது?
புகைப்பிடிப்பது, மது அருந்துவது, போதைப் பொருள் பழக்கம், உடல் பருமன், மனநல பிரச்சனைகள் ஆகிய பிரச்சினைகளால் விந்தணுக்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும். இதனை உணவால் மட்டுமே கட்டுபடுத்த முடியும்.
ஒரு ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் உணவு மற்றும் மோசமான பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, குறிப்பிட்ட சில உணவுகளை தொடவே கூடாது.
விந்துணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் உணவுகள்
1. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் சுவையாக இருந்தாலும் அதிலுள்ள கெமிக்கல்கள் விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கிறது. இதனால் அதன் இயக்கம் குறைந்து, விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைகிறது. ஆண்கள் இந்த இறைச்சி வகைகளை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
2. டிரான்ஸ் கொழுப்புகள் இதய நோயில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த வகையான கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இதயம் நோயுடன் சேர்த்து விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கிறது. இப்படியான உணவுகளை ஆண்கள் எடுத்து கொள்ளும் பொழுது விந்தணுக்களின் வீரியம் குறையும்.
3. சோயா பொருட்களில் அதிகமான கால்சியம் சத்து உள்ளது. இதனை அதிகமாக சாப்பிடும் பொழுது அது ஆண்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையில் தாக்கம் செலுத்துக்கிறது. சோயா பொருட்களில் தாவர அடிப்படையிலான ஈஸ்ட்ரோஜென்கள் மற்றும் பைட்ரோஈஸ்ட்ரோஜென்கள் உள்ளன. இவற்றை அதிகம் உட்கொள்ளும் போது, அது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்குகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |