40 வயதை கடந்த பெண்களா நீங்கள்? இந்த பரிசோதனையை கட்டாயம் எடுத்துக்கே
இன்றைய காலத்தில் பெண்கள் அவசியமாக செய்து கொள்ள வேண்டிய சோதனைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
பொதுவாக பெண்கள் வயது ஆக ஆக தங்களது உடம்பை அவ்வளவாக பார்த்துக் கொள்வதில்லை. ஆனால் இவ்வாறு அவர்கள் செய்யும் தவறுகள் நாளடைவில் மிகப்பெரிய நோய்த்தாக்கத்தினை ஏற்படுத்திவிடுகின்றது.
அதிலும் மார்பக மற்றும் கர்ப்ப வாய் புற்றுநோய்கள் அதிகமாகவே காணப்படுகின்றது.. இதற்காக ஒரு குறிப்பிட்ட வயதில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பரிசோதனைகளை சரியான முறையில் எடு்க்கப்படுவதில்லை.

பெண்கள் செய்து கொள்ள வேண்டிய சோதனைகள்
உடல் எடை அதிகமாகிக் கொண்டிருந்தால் அதற்கான பரிசோதனையான பிஎம்ஐ மற்றும் ரத்த பரிசோதனையை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயது அதிகரிக்கும் போது ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றது. இதனல் எளிதாக நோய்களில் தாக்கம் ஏற்படும்.
எலும்பின் ஆரோக்கியம் மற்றும் ரத்த சோதனை இவற்றினை தெரிந்து கொள்வதற்கு ஹீமோகுளோபின், வைட்டமின் டி மற்றும் பி12 அளவுகளை சரிபார்ப்பது மிகவும் முக்கியமாகும்.
அதுவே 30 வயது கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையை தவறாமல் செய்வது அவசியமாகும்.

அதுவே 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் நீரிழிவு மற்றும் கொழுப்பின் அளவை கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும்.
மேலும் 60 வயதுக்கு மேல் எலும்பு அடர்த்தி குறைபாட்டினை அறிவதற்கு டெக்கா ஸ்கேன் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் செய்வது மிகவும் அவசியமாகும்.
வருடத்திற்கு ஒருமுறை தோல் பரிசோதனையை மேற்கொள்வது அவசியமாகும். சுற்றுச்சூழல் மாசு காரணமாக தோல் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கின்றது. ஆதலால் பெண்கள் மேற்கண்ட அனைத்து பரிசோதனையையும் கட்டாயம் செய்து கொள்வது அவசியமாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |