சிவகார்த்திகேயனுடன் என்ன பிரச்சினை... ஒற்றை வார்த்தையில் இமான் அளித்த நச் பதில்
இசையமைப்பாளர் டி இமான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்கே குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நச்சென்று பதில் அளித்துள்ளார்.
இமான் சிவகார்த்திகேயன் பிரச்சினை
இசையமைப்பாளர் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் சகோதரர்கள் போன்று வலம்வந்த நிலையில் இருவரும் எதிரெதிர் துருவத்தில் நிற்கின்றனர்.
இமான் தனது முதல் மனைவியை பிரிந்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்று கூறப்பட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இமான் பட விழா ஒன்றில் கலந்து கொண்டு இன்று பத்திரிக்கையாளர்களுக்கு படம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அத்தருணத்தில் சிவகார்த்திகேயன் குறித்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க பத்திரிக்கையாளர் கேட்டுள்ளனர். இதற்கு இமான் கூறுகையில், முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒன்றும் இல்லை... இறைவன் பார்த்துக் கொள்வார்... எது சரி? எது தவறு? என்பது மனிதர்களை தாண்டி இறைவனுக்கு தெரியும் என்று நம்புகிறேன். அதனால் இறைவன் இதற்கு எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |