உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் மலை நெல்லி பச்சடி! எப்படி செய்வது தெரியுமா?
பல்வேறு மருத்துவ பண்புகளைக் கொண்டது தான் மலை நெல்லி. இந்த மலை நெல்லியானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இந்த நெல்லிக்கனியை ஊறுகாய் அல்லது ஜுஸ் செய்தும் சாப்பிடலாம். இந்த மலை நெல்லியில் உள்ள இயற்கை பொருட்களால் இதய தசைகள் வலிமைப்படுத்தி இரத்த ஓட்டத்தை ஓடச் செய்யும்.
மேலும் கொலஸ்ட்ரோலைக் குறைக்கவும், உங்கள் அறிவாற்றலை அதிகரிக்கவும் இந்த மலை நெல்லி உதவுகிறது.
இந்த மலை நெல்லியில் பச்சடி செய்தும் சாப்பிடலாம். எப்படி தெரியுமா?
தேவையான பொருட்கள்
- மலை நெல்லி - 2
- மிளகாய் - 2
- குருவிய தேங்காய் ஒரு கப்
- கடுகு - 1/2 டேபிள் டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தயிர் - 100g
தாளிக்க
- தேவையான எண்ணெய்
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- சிறிதளவு வெந்தயம்
- கருவேப்பிலை
செய்முறை
முதலில் மலை நெல்லிக்காயை உப்பில் முதல் நாளே ஊற வைத்து விடுங்கள்.
மறுநாள் இந்த மலை நெல்லிக்காய்யில் இருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு இதனோடு எடுத்து வைத்திருக்கும் தேங்காய், பச்சை மிளகாய் சிறிதளவு கடுகை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது இந்த அரைத்த கலவையை 100 மில்லி இருக்கக்கூடிய தயிரில் அப்படியே பச்சையாக கலக்கி விடுங்கள். இதன்பின் இதற்கு தேவையான அளவு உப்பை சேர்த்து விடுங்கள்.
மேலும் நீங்கள் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை விட்டு தாளிக்க தேவையான கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் போன்றவற்றை வெடிக்க விடுங்கள்.
இது வெடித்து வரும் நிலையில் கறிவேப்பிலையை போட்டு அந்த தாளிசம் செய்த பொருட்களை அப்படியே பச்சடியில் கொட்டி விட வேண்டும்.
இப்போது சுவையான அசத்தலான மலை நெல்லி பச்சடி தயார்.