சப்பாத்தி சுடும் போது மென்மையாக வர வேண்டுமா? இதை சேர்த்தால் போதும்
பொதுவாக இரவு உயவுகளில் அதிகமாக செய்யப்படுவது சப்பாத்தி தான். இது டயட்டில் இருப்பவர்களும் அதிகமாக சாப்பிடுவார்கள்.
இத தவிர உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஏன் குழந்தைகள் கூட சப்பாத்தியை அதிகம் விரும்புகின்றனர்.
எனவே பெரும்பாலானவர்களின் உணவில் சப்பாத்தி அதிகமாக இடம்பெற்று வருகின்றது. இந்த சப்பாத்தியை எப்படி மென்மையாக சுட வெண்டம் என்பதை இந்த பதிவில் பாாக்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- தண்ணீர்
- உப்பு
- தயிர்
- எண்ணெய் சப்பாத்தி
செய்முறை
நீங்கள் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் கோதுமை மாவு தரமானதாக இருக்க வேண்டும். இதுவே மென்மையான சப்பாத்தி செய்வதற்கான முதல் படி. மூன்று கப் கோதுமை மாவு எடுத்து அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேருங்கள்.
அடுத்ததாக தேவையான அளவு உப்பு, மூன்று ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து மாவை பிசையவும். பயன்படுத்தும் கோதுமை மாவின் அளவை பொறுத்து தண்ணீர் தேவைப்படும்.
தேவைப்பட்டால் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை பிசையலாம். கோதுமை மாவு ஒருசேர வந்தாலே போதும். நீண்ட நேரத்திற்கு அழுத்தும் கொத்து பிசைய வேண்டிய அவசியமில்லை. தற்போது மாவை துணி போட்டு மூடி அரைமணி நேரத்திற்கு ஊற விடுங்கள்.
அரை மணி நேரத்தில் மாவு நன்றாக செட் ஆகி விடும். இப்போது கைகளில் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து மாவை பிசையவும். மென்மையாக உணர முடியும். கொஞ்சம் மாவு தூவி இரண்டு நிமிடத்திற்கு அழுத்தம் கொடுத்து பிசையவும்.
இப்போது சின்ன சின்ன உருண்டையாக எடுத்து சப்பாத்தி மாவு பிசையலாம். லட்டு-ஐ விட சப்பாத்தி உருண்டை கொஞ்சம் அதிகமான சைஸில் எடுத்து உருட்டவும். நாம் பயன்படுத்திய அளவுகளில் 15 சப்பாத்தி வரை சுடலாம்.
பூரி கட்டையில் கொஞ்சமாக மாவு தூவி வட்ட வடிவத்திற்கு மாவை உருட்டவும். பூரி கட்டையில் மாவு ஒட்டுவது போல் இருந்தால் நீங்கள் இன்னுமும் கூட படவுர் மாவு தடவலாம்.
அடுத்ததாக உருட்டிய மாவை இரண்டு கைகளில் மாற்றி மாற்றி போடவும். சப்பாத்தி கல் சூடுபடுத்தி கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சப்பாத்தி போட்டு இரண்டு பக்கமும் முழுமையாக வேக வைக்கவும்.
இப்படி சப்பாத்தி மாவு தயாரித்தால் நீண்ட நேரத்திற்கு சப்பாத்தி மென்மையாக இருக்கும். எண்ணெய் பதிலாக நெய் கூட பயன்படுத்தலாம். இரண்டும் பயன்படுத்தாத பட்சத்தில் தீயை அதிகப்படுத்தி சப்பாத்தி சுடவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |