சின்னத்திரையில் இருந்து விலகி Makeup Artist ஆக மாறிய பிரபலங்கள் .....
சின்னத்திரையில் பிரபலமாகி பின்னர் மேக்கப் இல் இருந்த ஆர்வத்தால் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய பிரபலங்கள் யார் யார்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சின்னத்திரை பிரபலங்கள்
அனிதா சம்பத் செய்தித்தொகுப்பாளினியாக இருந்து பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது மேக்கப் துறையில் பயிற்சி பெற்று அதி்ல் ஆர்வம் காட்டி வருகிறார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜனனி அசோக்குமார். இவர் நடிப்பை நிறுத்திவிட்டு தற்போது மேக்கப் துறையில் சிறந்து விளங்குகின்றார்.
பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வரும் ஆர்த்தி சுபாஷ் தனது யூடிப் சேனலில் மேக்கப் பயிற்சி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
நடிகை நக்ஷத்ரா நாகேஷ். இவர் நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் மேக்கப் தொழிலை ரசித்து செய்து வருகிறார்.
நடிகை சந்தோஷினி, மேக்கப் தொழில் மீது கொண்ட ஆர்வத்தால் நடிப்பை நிறுத்திவிட்டு தனது முழுநேரமும் மேக்கப் ஆர்டிஸ்டாக மாற்றி விட்டார்.
மைனா நந்தினி மேக்கப்பில் ஆர்வம் கொண்டவர். தனது யூடியூப் சேனலில் மேக்கப் தொடர்பான டிப்ஸை விஜே அர்ச்சனா ஓராண்டு மேக்கப் பயிற்சியை முடித்துவிட்டு தற்போது தனியாக மேக்கப் வகுப்புகளை நடத்தி வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |