காலை உணவு செய்யணுமா ? அப்போ சத்தான சுவையான ராகி அடை இப்படி செய்து பாருங்க
கடைகளில் வாங்கும் உணவை விட வீட்டிலேயே மிகவும் சத்தான சுவையான உணவை செய்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.
அந்த வகையில் ராகியை வைத்து அடை செய்யலாம். ராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது.
இந்த சுட்டெரிக்கும் வெயிலுக்கு ராகியில் செய்த உணவு மிகவும் நல்லது. இது உடல் சூட்டைத் தணித்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. ராகியில் உள்ள ஊட்டச்சத்ததுக்கள் உடலின் ஒட்டுமாத்த ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும்.
தொடர்ந்து இந்த பதிவில் ராகி அடை செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி - 1 கோப்பை
- அரிசி மாவு - 1 டீஸ்பூன்
- இஞ்சி - 1 சிறிய துண்டு பொடியாக நறுக்கியது
- பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
- வெங்காயம் - 1
- எள் விதைகள் - 1 டீ ஸ்பூன்
- உப்பு - 1/2 டீ ஸ்பூன்
- முருங்கை இலை - 1 கைப்பிடி
- துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
- துருவிய கேரட் - 1
செய்யும் முறை
ஒரு கப் ராகி மாவில் அரிசி மாவை சேர்த்து கொள்ள வேண்டும் மீண்டும் அதில் இஞ்சி பச்ச மிளகாய் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் வெங்காயம் முருங்கை கீரை தேங்காய் துருவல் கரட் துருவல் வெள்ளை எள் மற்றும் உப்பு சோத்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிசையும் போது தண்ணீர் ஊற்றி பிசையாமல் தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும். கையில் ஈரப்பதத்துடன் மாவை பிசையும் போது கையில் ஒட்டாமல் வரும்.
இதை நன்றாக பிசைந்து எடுத்ததும் வாழை இலையில் வைத்து தட்ட வேண்டும். இப்படி தட்டும் போது கையில் தண்ணீர் நனைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு தட்டையான பாத்திரத்தை வைத்து அது சூடாகியதும் தட்டிய அந்த அடையை இலையோடு போடவும். பின்னர் கொஞ்சம் சூடாகியதும் இலையை எடுத்து விடவும்.
அப்போது தான் அடை உடையாமல் வரும். இந்த அடையை வயதானவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் உண்ணலாம்.