அப்பளத்தில் குழம்பு செய்யலாமா? 10 நிமிடம் போதும் எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே அவைவரும் அப்பளம் மிகவும் பிடிக்கும். சமையல் சுமாராக இருக்கும் போது உணவை சுவையாக மாற்றுவதே இந்த அப்பளம் தான்.
அப்பளத்தை உணவுகளில் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் அந்தப் அப்பளத்தில் குழம்பு செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் வீட்டிலேயே இலகுவாக அல்டிமேட் சுவையில் அப்பளக்குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சோவி அப்பளம் (அல்லது) சின்னதா இருக்கக்கூடிய மிளகு அப்பளம்
சின்ன வெங்காயம் - 15
கடுகு - 1 ஸ்பூன்
தக்காளி - 2
மஞ்சள் தூள் - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் -அரை மூடி
புளிக்கரைசல் - ஒரு கப்
செய்முறை
முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்கு எண்ணெய் சூடு வந்த பிறகு மிளகு அப்பளத்தை நன்கு சிவக்க பொரித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பொரித்து எடுத்து பின் அது தனியாக இருக்கட்டும். அதன் பின் மற்றொரு கடாயை எடுத்து எண்ணெய் ஊற்றி கடுகை பொரிய விட்டு பின்னர் சின்ன வெங்காயத்தை எண்ணெயில் போட்டு லேசாக வதக்க வேண்டும்.
அத்துடன் கருவேப்பிலை ஒரு கொத்து போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் அளவுக்கு நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய உடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்தவுடன் அரை மூடி அளவிற்கு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக்கொண்டு அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளரிவிட வேண்டும்.
பின்னர் கரைத்து வைத்த புளித்தண்ணீரை சேர்க்க வேண்டும். குழம்பு நன்கு கொதித்த பின் அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
கடைசியில் பொறித்து வைத்த அப்பளத்தை அதில் போட்டு கரண்டியால் லேசாக கிளறவும். இப்பொழுது சுவையான அப்பள குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |