மென்மையான இட்லி வேணுமா? இட்லி மாவு ஊற வைக்கும் போது இது 2 ஸ்பூன் சேருங்க
நாம் அனைவரும் காலையில் விரும்பி சாப்பிடும் இட்லியை பஞ்சுபோல சாப்பிட வேண்டும் என்பதற்காக இட்லி மாவில் சில டிப்ஸ்களை பயன்படுத்த வேண்டும்.
இட்லி மா
இட்லி மா அரைக்கும் போது மென்மையாக வர வேண்டும் என்றால் மாவு அரைக்கும் போது அதன் பக்குவம் நன்கு அறிந்திருக்க வேண்டும். இந்த மாவு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகி விடாமல் அரைக்க வேண்டும்.
மாவும் கெட்டியாகி விடக்கூடாது. அதேபோல உளுந்து அதிகமாகிவிடவும்கூடாது, குறைவாகிவிடவும் கூடாது, இதனால், இட்லி கெட்டியாகிவிடும்.
இந்த பக்குவத்தில் மாவு அரைத்து எடுத்தல் வேண்டும். இட்லி மா புளிக்க வைக்கும் போது அரிசி மா மட்டும் புளித்தால் போதும். உளுந்து மா புளிக்க தேவை இல்லை.
அரிசி அரைக்கும்போது அன்றைய தினம் வடித்த சாதத்தை கால் கப் சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக கிடைக்கும். அரிசி மாவை அரைத்தவுடன் அதை விட கொஞ்சம் மை போல உளுந்து மாவை அரைத்து எடுக்க வேண்டும்.
இட்லி மாவு ஊற்றும் போது கொஞ்சம் ஐஸ் வாட்டர் மிக்ஸ் செய்து ஊற்றி அவித்தால் இட்லி மென்மையாக வரும். இட்லி மாவு அரைக்கும் போது அதில் கொஞ்சம் வெந்தயம் சேர்த்து அரைத்தால் இட்லி மிகவும் மென்மையாக வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |