இட்லி, தோசை மாவு அரைக்கும் போது தயிர் சேர்த்து அரைத்துள்ளீர்களா?
இட்லி, தோசை நாம் பொதுவாக காலையில் இலகுவாக செய்யும் ஒரு உணவு வகையாகும். இட்லி, தோசை மாவு அரைக்கும் போது அதில் நாம் ஏகப்பட்ட தானியங்களை சேர்க்கின்றோம்.
இதில் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு என்பதால் இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.
காலையில் எனர்ஜியாகவும் இருப்பதற்கு இந்த உணவுகள் உதவும். இந்த மாவில் எவற்றை சேர்த்து அரைத்தால் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் தயிர் சேர்த்து அரைப்பதால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இட்லி, தோசை மா
தோசை இட்லி செய்ய மாவு அரைக்கும் போது வெறும் அரிசியை அரைக்காமல் அதனுடன் சத்துள்ள பொருட்களை சேர்த்து அரைக்கும் போது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மாவை ஒழுக்கான பதத்தில் அரைத்து எடுத்தால் அது இன்னும் மேன்மை தரும். மாவு புளிக்காமல் இருந்தால் இட்லி தோசை செய்து எடுக்கும் போது அது கல்லு போல இருக்கும்.
எனவே மாவு நன்றாக புளிக்க வேண்டும் என்றால் அரைத்த மாவை புளிக்க வைக்கும் போது அதில் கொஞ்சமாக தயிர் சேர்த்து அரைத்தால் மாவு எளிதில் புளித்து பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும்.
நீங்கள் குளிர்காலத்தில் மாவை புளிக்க வைக்க சிரமப்படும் போது தயிர் மற்றும் தண்ணீருக்கு பதிலாக இளநீர் சேர்த்து அரைத்தால் நல்லது.
இதனால் மாவு எளிதாக பொங்கி விடும். மாவு எவ்வளவு புளிக்கிறதோ அந்த அளவிற்கு இட்லி தோசை மென்மையாக பூ போல வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |