மணக்க மணக்க நாவூறும் சுவையில் பன்னீர் புலாவ் ...இனிமே இப்படி செய்ங்க
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த பன்னீர் புலாவை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பன்னீர் - 200 கிராம்
- பாஸ்மதி அரிசி- 1 கப்
- வெங்காயம் - 2
- சீரகம் - அரை தேக்கரண்டி
- கேரட் - 1 கப்
- பீன்ஸ் - 1 கப்
- பட்டாணி - 1 கப்
- பச்ச மிளகாய் - 2
- கரம் மசாலா - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- நெய் - 2 தேக்கரண்டி
- புதினா இலைகள்
- கொத்தமல்லி
- பிரியாணி இலை
- ஏலக்காய்
- கிராம்பு
- மிளகு
- இலவங்கப்பட்டை
- தண்ணீர்
- உப்பு
செய்யும் முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி பன்னீரை வறுத்து எடுத்து வைக்க வேண்டும்.
இன்னுமொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு, சீரகம், வெங்காயம் இது எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் பச்ச மிளகாயை கீறி போட வேண்டும். இவை நன்றாக வதங்கியதும் கரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, போன்றவற்றை போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
இதன் பின்னர் கரம் மசாலா, உப்பு போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். கொத்தமல்லி இலை, புதினா இலை, வறுத்த பன்னீர் இதையும் போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
இதன் பின்னர் பாஸ்மதி அரியை ஊறவைத்து கழுவிய பின் இதனுடன் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இதன் பின்னர் 2 கப் தண்ணீர் ஊற்றி 7 நிமிடங்கள் குக்கரில் வேகவிட்டு எடுத்தால் சுவையான பன்னீர் புலாவ் தயார்.