முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
முள்ளங்கி என்பது ஒரு காய்கறி வகையை சேர்ந்தது. இதை படித்தவர்களும் இருப்பார்கள் பிடிக்காதவர்களும் இருப்பார்கள். இதில் தண்ணீர் சத்து அதிகமாக இருக்கிறது. இந்த காய்கறியை வாரத்தில் இரண்டு தடவையாவது சாப்பிடுவது முக்கியமாகும்.
இதனால் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை இலகுவாக நீக்க முடியும்.முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது.
இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன. தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன.
முள்ளங்கியானது கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சினை நீக்க உதவுகிறது. எனவே முள்ளங்கி சாப்பிடுவது அவசியமாகும். இதை எப்படி இதன் மணம் வராமல் சட்னி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 2 ஸ்பூன்
- கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
- உளுந்து – ஒரு ஸ்பூன்
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- வர மல்லி – அரை ஸ்பூன்
- வர மிளகாய் – 4 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப அதிகம் அல்லது குறைவாக எடுத்துக்கொள்ளலாம்)
- பூண்டு – 5 பல்
- சின்ன வெங்காயம் – 10
- முள்ளங்கி – கால் கிலோ
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- மல்லித்தழை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – ஒரு ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- உளுந்து – கால் ஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- வரமிளகாய் – 1 (உடைத்தது)
செய்முறை
முதலில் பாத்திரமொன்றில் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு, உளுந்து, சீரகம், வர மல்லி, வர மிளகாய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதை ஆறியவுடன் ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், முள்ளங்கி, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
இதையும் மிக்ஸியில் பொடித்து வைத்துள்ள வற்றுடன் ஆறவைத்து சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதை முடித்ததும் ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வர மிளகாய் அரைத்து சேர்த்து தாளித்து இந்த சட்னியில் சேர்த்தால் சுவையான முள்ளங்கி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |