படத்தில் இருக்கும் இந்த குட்டிப் பையன் யார் தெரியுமா? அடடே விஜய் டிவியின் டாப் பிரபலமா?
பிரபல டிவியின் தொகுப்பாளராக கலக்கி வருபவர் மாகாபா ஆனந்த்.
சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார், அதில் பிரியங்காவுடன் சேர்ந்து இவர் செய்யும் சேட்டைகளுக்கு அப்லாஸ் அள்ளும்.
தொகுப்பாளர் என்பதையும் தாண்டி, திறமையுடன் வலம் வரும் இளைஞர்களை தேடிபிடித்து தன்னால் இயன்ற உதவியையும் செய்து வருகிறார்.
இதற்கு உதாரணமாக குக் வித் கோமாளி புகழை குறிப்பிடலாம், தனக்கு குரு என்றால் அது மாகாபா ஆனந்த் அண்ணா தான் என புகழே பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார்.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாகாபா, சமீபத்தில் அவரது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், அதே திருட்டு முழி, அழகா இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.