இணையத்தில் பிரபலமாகும் மக்கானா... அப்படி இதில் என்ன இருக்கிறது?
அண்மை காலமாகவே இணையத்தில் பதிவிடப்படும் பல்வேறு காணொளிகளில் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும், சரும அழகை மேற்படுத்துவதற்காகவும் மக்கானா அதிகமாக பிரபலமாகி வருகின்றது.
மக்கானா (Makhana) எனப்படுவது தாமரை காயிலிருந்து பெறப்படும் மருத்துவ குணங்கள் நிறைந்த தாமரை விதையாகும். அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே மக்கானா தொன்று தொட்டு புலக்கத்தில் இருந்துள்ளது. இருப்பினும் இதன் சிறப்பு பற்றி இளைஞர் சமூகத்துக்கு இப்போது தான் தெரியவந்துள்ளது. அதனை பயன்படுத்தி செய்யப்படும் சிற்றுண்டி ஆரோக்கியம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது.
மக்கானாவின் நன்மைகள்
மக்கானா என அழைக்கப்படும் தாமரை விதையில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, மாவுச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற பல உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியமான பொருளாகும். மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பலனளிக்கக் கூடிய ஒரு உணவாக அறியப்படுபகின்றது.
வளரும் குழந்தைகளுக்கு ஹெல்தியான ஸ்நாக்ஸ் கொடுக்க ஆசைப்பட்டால் மக்கானா ஒரு சிறந்த தேர்வு. நெய்யில் வறுத்த மக்கானாவை உப்பு தூவி, ஒரு கிண்ணத்தில் போட்டு குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த துணைப்புரிகின்றது.
மக்கானா சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் செயல்பாட்டை சீராக்குவதற்கு பெரிதும் உதவுகின்றது. மேலும் இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை என்றும் இளமையாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது.
மக்கானாவில் தாவர அடிப்படையிலான உள்ள அதிக புரதச்சத்துக்கள் தசைகளை சரிசெய்ய உதவுகிறது மற்றும் ஆற்றலைக் அதிகரிக்க உதவுகின்றது.
மக்கானாவில் உள்ள குறைவான கலோரிகள், உடல் எடையை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. மக்கானாவில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மேலும், மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மற்றும் செரிமான மண்டலத்தை சிறப்பாக வைத்துக்கொள்கிறது.
மக்கானாவில் இயற்கையிலேயே குளூட்டன் இல்லாததால், அது குளுட்டன் ஏற்புத்திறன் இல்லாதவர்களுக்கு ஏற்ற உணவாக அமைகிறது.
இந்த மக்கானாவில் கொலாஸ்ட்ரால் குறைவாகவும், மெக்னீசியச் சத்துக்கள் அதிகமும் உள்ளது. இது ரத்த அழுத்தத்தைத் முறைப்படுத்துகிறது.
மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய நோய்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது. மக்கானா ஒரு சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.
மக்கானா ஒரு மாலை நேர சிற்றுண்டியாக பலரால் விரும்பி சாப்பிடப்படும் உணவாகும். உடல் எடையைக் குறைக்க விரும்புவர்களுக்கு இந்த சிற்றுண்டி மிகவும் சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |