chanakya topic: இந்த 5 குணங்கள் இருந்தால் மேதைகளாம்... உங்களிடம் இருக்கா?
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக வாழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றிய ஆழ்ந்த அறிவையும் ஞானத்தைக் கொண்டிருந்தமையால் இவர் கருத்துக்கள் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்றது.
இன்றும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இது பலரின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளது.
அந்த வகையில் சாணக்கிய நீதிநூலில் இருந்து திறட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சில பழக்கங்கள் ஒரு நபரை மேதையாக மாற்றும் என குறிப்பிடப்படுகின்றது. அப்படிப்படட குணங்கள் என்னென்ன என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
மேதைகளின் முக்கிய குணங்கள்
சாணக்கியரின் கருத்துப்படி ஒருவருக்கு புதிய விடயங்களை கற்றுக்கொள்வதில் எந்தளவுக்கு ஆர்வம் இருக்கின்றதோ, அந்தளவுக்கு அவர் அறிவு வளர்ச்சியடையும் என குறிப்பிடுகின்றார்.
புத்திசாலிகள் எப்போதும் அறிவு தாகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதும் தம்மை தேடி வரும் வரையில் காத்திருப்பது கிடையாது இவர்கள் வாய்ப்புகளை உருவாக்கி வெற்றியடையும் ஆற்றலை கொண்டிருப்பார்கள்.
மேதைகளின் மிக முக்கியதான குணங்களில் ஒன்று தான் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துக்கொள்வது. உணர்வுகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள தெரிந்தவர்களை விட அதி புத்திசாலிகள் யாரும் இருக்கவே முடியாது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
புத்திசாலிகள் எப்போதும் சூழ்நிலைகளின் மீது கவனம் செலுத்துவதை விடுத்து இலக்குகளில் தீவிர கவனம் செலுத்துகிறார்கள். இதுவே அவர்களை மேதைகளாக மாற்றுகின்றது என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
அதி புத்திசாலிகளின் கவனத்தை சிதறடிப்பது மிகவும் கடினமான விடயம். இலக்கில் குறி வைக்கும் குணம் ஒருவரை மேதையாக மாற்றுகின்றது.
சாணக்கியரின் கருத்துப்படி ஒருவருக்கு மற்றவர்களை கவரும் வகையில் பேசும் திறன் இருந்தால், அவர் சிறந்த அறிவாளியாகவே பார்க்கப்படுகின்றார். சிறந்த பேச்சாற்றல் ஒருவரை மேதையாக மாற்றும் என குறிப்பிடுகின்றார்.
சாணக்கிய நீதியின் படி, ஒரு புத்திசாலிகள் ஒரு போதும் தவறான விடயங்களை செய்ய விரும்ப மாட்டார்கள். இவர்கள் மற்றவர்களின் அனுபவங்களில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |