குடும்பத்துடன் தலைமறைவாகிய ராஜபக்சே எங்கிருக்கிறார் தெரியுமா? வெளியான ரகசிய தகவல்!
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த தொடர் போராட்டம் பெரியதாக வெடிக்க இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின்னர் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார். அவரின் வீட்டையும் இலங்கை மக்கள் எரித்தனர்.
பின்னர் தப்பிச்சென்ற ராஜபக்சே எங்கே என பல விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் தற்போது கிடைத்த தகவலின் படி, ராஜபக்சே குடும்பத்தினருடன், திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள பில்லோ ஹவுஸ் எனப்படும் பங்களாவில்
தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த இடம், கடற்படை அமைந்துள்ள அந்த இடம் கடலுக்கும், கடற்படை நுழைவு வாயிலும் அருகில் உள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்காக ராஜபக்சே இங்கு தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் மனிதன் சுவாரசியமான செய்திகளை தொடர்ந்து படிக்க....