மூட்டு வலியால் சிகிச்சை பெற்று வரும் தோனி - கட்டணமாக அவர் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடிதந்துள்ளார். ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காகவும் 4 முறை கோப்பையை வாங்கி தந்துள்ளார்.
மூட்டு வலி
இதனிடையே, தோனி மூட்டு வலியால் கடந்த சில நாட்களாகவே அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு பயணம் செய்துள்ளார்.
70 கி.மீ பயணம் மேற்கொண்ட தோனி ஜார்க்கண்ட் காடுகளில் அமைந்துள்ள உள்ள கிராமத்தில், ஒரு சிறிய ஆசிரமத்தில், வந்தன் சிங் கேர்வார் என்ற நாட்டு மருத்துவரிடம் சென்று 4 நாட்களுக்கு ஒரு முறை சிகிச்சை பெற்று வருகிறாராம்.

கட்டணம் எவ்வளவு
ஆனால், இதற்காக கட்டணமாக வெறும் ரூ.40 மட்டுமே கட்டணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், தோனி அங்கு சென்றுவருவதால் செல்ஃபி எடுக்க கூட்டம் அலைமோதுகிறதாம். எனவே 40 வயதான தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார்.
धोनी के घुटनों का इलाज 40 रुपए में: कैप्टन कूल दर्द से परेशान; हर 4 दिन में रांची के वैद्य की ले रहे दवा#Jharkhand #Ranchi #Dhonihttps://t.co/lE8xyT6uUR pic.twitter.com/bsSWYrm8Pr
— Dainik Bhaskar (@DainikBhaskar) June 30, 2022