நயன்தாரா பாணியில் குழந்தை முகத்தை காட்டிய மகாநதி சீரியல் நடிகை- இறுதியில் டுவிஸ்ட் இருக்கு
முதல் தடவையாக குழந்தை முகத்தை காட்டுவதாக கூறி மகாநதி சீரியல் நடிகை பார்த்த வேலை சமூக வலைத்தளங்களில் செய்தியாக வைரலாகி வருகின்றது.
நடிகை வைஷாலி தனிகா
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி.
இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் தான் நடிகை வைஷாலி தனிகா.
இதற்கு முன்னர் லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, முத்தழகு உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். வைஷாலி தனிகா சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் சங்கிலி புங்கிலி கதவ தொற, காதல் கசக்குதய்யா, கடுகு, பா.பாண்டி, சர்க்கார் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
சீரியலில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய நீண்டநாள் காதலர் சத்யதேவை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் இருவரும் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பகிர்ந்தனர்.
குழந்தை முகத்தை பாருங்க
இந்த நிலையில் சீரியல் நடிகை வைஷாலி தனிகாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தம்பதிகள் இருவரும் குழந்தைக்கு சவன் தேவ் என பெயர் வைத்திருப்பதாக பகிர்ந்திருந்தனர்.
அதன் பின்னர் குழந்தையின் முகத்தை காட்டுவதாக ஒரு காணொளியொன்றை பகிர்ந்தனர். ஆனால் காணொளியில் இறுதியில் கணவரின் முகத்தை காட்டி அந்த காணொளியை நகைச்சுவை காணொளியாக மாற்றி விட்டார்.
குழந்தையின் முகத்தை பார்க்க ஆர்வமாக இருந்த நெட்டிசன்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |