அம்பலமான அருணின் உருட்டுக்கள்.. பொட்டியுடன் கிளம்பிய சீதா- சூடுபிடிக்கும் கதைக்களம்
சீதாவிடம் அருண் கூறிய பொய்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக தெரிய வரும் போது பொறுத்துக் கொள்ள முடியாமல் சீதா பொட்டி படுக்கையுடன் வீட்டிற்கு கிளம்பியுள்ளார்
சிறகடிக்க ஆசை சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் கோமதி பிரியா நாயகியாகவும், வெற்றி வசந்த் நாயகராகவும் நடித்து வருகிறார்கள்.
மூன்று மகன்களும், மூன்று மருமகள்களும் ஒரே குடும்பமாக வாழும் பிரச்சினைகளை கருவாக வைத்து சீரியல் நகர்த்தப்படுகிறது.
சீரியலில், மனோஜுற்கு பிடித்த அம்மாவாகவும், முத்துவை வெறுக்கும் அம்மாவும் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் விஜயா. பணத்தை மாத்திரம் மதித்து மீனாவை துன்புறுத்தி வருகிறார்.
அருணிடம் சிக்கிய முத்து
இந்த நிலையில், சீதாவை திருமணம் செய்து வந்த அருண் தன்னை பெரியாளாக காட்டிக் கொள்வதற்காக பல வேலைகளை பார்த்து கொண்டிருக்கிறார்.
[
கடந்த வாரங்களில் மீனா அம்மாவின் கடையை ரோகிணி ஆட்களை வைத்து தூக்கிச் சென்றுள்ளார். அவற்றை முத்து தான் அதிகாரிகளிடம் பேசி மீட்டுள்ளார். இதனை அருண் செய்ததாக வீட்டில் கூறி நல்ல பெயர் போட்டுக் கொண்டார்.
[
அருணின் வேலைகளை தெரிந்து கொண்ட சீதா வீட்டிற்கு சென்று கேட்கும் பொழுதும் அவர் அதே பொயை கூற, இருவருக்கும் சண்டை வந்து விடுகிறது. சண்டையின் முடிவில் மரியாதையும், அன்பும் இல்லாத இடத்தில் நான் இருக்கமாட்டேன் எனக் கூறி சீதா அவருடைய அம்மா வீட்டிற்கு செல்கிறார்.
அப்போது சீதாவை சமாதானம் செய்ய வந்த முத்து, “ அற மென்டல் நீ எதையும் கண்டுக்காத..” என அறிவுரை வழங்க, அதனை அருண் பின்னால் நின்று கேட்டு விடுகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |